/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யை குளிர்வித்த மழை நெரிசலில் தவித்த பயணிகள்
/
'கொடை'யை குளிர்வித்த மழை நெரிசலில் தவித்த பயணிகள்
ADDED : ஏப் 13, 2024 02:20 AM

கொடைக்கானல்:கொடைக்கானலில் தகிக்கும் வெயிலுக்கு மத்தியில் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்ததால் குளு ,குளு நகரம் சில்லிட்டது.
இங்கு இரு மாதமாக சுட்டெரிக்கும் வெயிலுடன் வறண்ட வானிலை நீடித்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நேற்று மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. ரம்யமான சீதோஷ்ணம் நிலவியது. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வன சுற்றுலா தலம், கோக்கர்ஸ்வாக் , வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு , ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
போதுமான போலீசார் இல்லாததால் பெருமாள்மலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, செண்பகனுார், ஏரிசாலை, வனச்சுற்றுலா தலம், ரோஜா பூங்கா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 2 மணி நேர தாமதத்திற்கு பின்னரே வாகனங்கள் நகரை அணுக முடிந்தது. போலீசார் இல்லை. வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையின் சோதனையும் நெரிசலுக்கு காரணமாக இருந்தது.

