ADDED : செப் 09, 2024 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம், : நத்தம் அருகே சமுத்திராபட்டி பட்டத்தரசி அம்மன் கோயில் விழா ஆக. 23-ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை பட்டத்தரசி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஊர் மந்தையில் கண் திறக்க சிறப்பு அலங்காரமும், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் , ஆடுகள் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் பரிவார தெய்வங்களோடு பட்டத்தரசி அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.