ADDED : ஜூன் 03, 2024 04:14 AM
கன்னிவாடி: கன்னிவாடி செம்பட்டி பகுதியில் பசுந்தீவன சாகுபடியை துவக்கிய சூழலில் வயல்களில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்தது.
கன்னிவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் மயில், கடமான், காட்டுமாடு போன்ற வன உயிரினங்கள் அதிகளவில் உள்ளன. அவ்வப்போது யானைகளும் மலையடிவார கிராமங்களில் உலா வருவது வழக்கமாகிவிட்டது.
சமீபமாக நீலமலைக்கோட்டை, போலியம்மனுார், பண்ணைப்பட்டி, தோணிமலை மலையடிவார வனப்பகுதியிலிருந்து, விளைநிலங்களை தேடி மயில்கள் படையெடுக்க தொடங்கியது.
சித்தரேவு, மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி வேலன்சேர்வைகாரன்பட்டி, வீரக்கல் கரிசல்பட்டி, திப்பம்பட்டி, தெத்துப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, குளத்துப்பட்டி பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் அதிகளவில் துவங்கியது. '
சமீபத்திய சாரல் மழையால் பலரும் உழவு, கால்நடை வளர்ப்பிற்கு பசுந்தீவன உற்பத்தி போன்றவற்றை துவக்கினர்.
போதிய உணவு கிடைக்காமல் சமவெளிகளில் சுற்றி வந்த மயில்களுக்கு தற்போதைய சூழல் சாதகமாக உள்ளது. இதையடுத்து இங்குள்ள வயல் பகுதிகளில் மயில்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

