/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்
/
தடை அருவிக்கு சென்றவர்களுக்கு அபராதம்
ADDED : ஆக 18, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், : கொடைக்கானலில் வனத்துறையால் தடை செய்யப்பட்ட கரடிச்சோலை அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கரடிச்சோலை அருவிக்கு சில ஆண்டுகளுக்கு முன் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.திண்டுக்கல்லை சேர்ந்த வசந்தகுமார், தீபன் சக்கரவர்த்தி, கலையரசன், நவீன், செல்வம், இமயபாரதி, சிவா, காசிராஜன், பிரேம்குமார், சஞ்சய், கவுதம் உள்ளிட்ட 14 பேர் கரடிச் சோலை அருவிக்கு அத்துமீறிச் சென்றனர்.
இவர்களை கொடைக்கானல் வனத்துறையினர் பிடித்து தலா ரூ. ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனர்.

