sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையால் உருவாகும் சீர்கேடுகளால் மக்கள் பாதிப்பு

/

குப்பையால் உருவாகும் சீர்கேடுகளால் மக்கள் பாதிப்பு

குப்பையால் உருவாகும் சீர்கேடுகளால் மக்கள் பாதிப்பு

குப்பையால் உருவாகும் சீர்கேடுகளால் மக்கள் பாதிப்பு


ADDED : பிப் 10, 2025 05:32 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையால் உருவாகும் சீர்கேடு : நிலக்கோட்டை விராலிபட்டி குழந்தைகள் மையம் அருகில் குப்பை கொட்டி குவித்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை குழந்தைகள் மையப்பகுதியில் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--உதயகுமார், விராலிபட்டி.----------

கழிவுநீரால் அவதி : திண்டுக்கல் திருவள்ளுவர் ரோட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் வழியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்வாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாரிமுத்து, திண்டுக்கல்.----------

சேதமான குடிநீர் தொட்டி : மோர்பட்டி ஊராட்சி மூக்கர பிள்ளையார் கோயில் குடியிருப்பு பகுதியில் குடிநீர் தொட்டி சேதமடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால் பொது மக்கள் குடிநீர் தேவைக்கு சிரமப்படுகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். --

-கருப்புச்சாமி, அய்யலுார்.----------

மின்கம்பத்தால் பாதிப்பு : பழநி காவலப்பட்டி ஊராட்சி ஆர்.வாடிப்பட்டி சமுதாய கூடம் முன்பாக மின் கம்பத்தை நட்டு வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரெங்கதுரை, ஆர். வாடிப்பட்டி.-----------

இடியும் நிலையில் மருத்துவமனை : சின்னாளபட்டி பேரூராட்சி சிக்கனம்பட்டியில் இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மருத்துவ பணியாளர்கள் ஆபத்தான நிலையில் பணியாற்றுகின்றனர்.

-மதன், சின்னாளப்பட்டி.

-----------தெரு நாய்கள் தொல்லை : திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் சுற்றி தெரியும் நாய்களால் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். அச்சுறுத்தலாக உள்ளதால் மக்கள் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுரேஷ்குமார்,ரவுண்ட் ரோடு.-----------

சுகாதாரக்கேடுகளை ஏற்படுத்தும் கழிவுகள் : திண்டுக்கல் நத்தம் ரோடு கொசவபட்டி அருகே பக்தர்கள் அன்னதான வழங்கப்பட்டு தட்டுகளை ரோட்டோரங்களில் குவித்து வைத்துள்ளனர். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், கொசவபட்டி.






      Dinamalar
      Follow us