ADDED : பிப் 15, 2025 04:43 AM
வடமதுரை : அய்யலுாரில் சுற்றி திரிவதோடு வீடு ,கடைகளில் புகும் குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேறு ஏதோ ஒரு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த குரங்குகளை சிலர் பிடித்து வந்து அய்யலுார் பகுதியில் விட்டுள்ளனர்.
இங்கு முகாமிட்டுள்ள குரங்குகள் கடை , வீடுகளில் புகுந்து உணவு, உணவு அல்லாத பொருட்களையும் துாக்கி செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. சில நேரம் பெண்கள், குழந்தைகளை துரத்துகின்றன. குரங்குகளிடம் சிக்கி கடிப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன. விவசாய தோட்டங்களுக்கும் சென்று விளை பொருட்களை சேதம் செய்கின்றன.
இவை உண்பதை காட்டிலும் வீணாகும் பொருளின் அளவு கூடுதலாக உள்ளன. அய்யலுாரில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து போதிய உணவு கிடைக்கும் வனப்பகுதியில் சேர்க்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.