/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டோர டூவீலர்களால் தினமும் தடுமாறும் மக்கள்
/
ரோட்டோர டூவீலர்களால் தினமும் தடுமாறும் மக்கள்
ADDED : ஏப் 11, 2024 06:04 AM

திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் எதிரே மெயின் ரோட்டின் இருபுறமும் எந்நேரமும் டூவீலர்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இயல்பாக அந்த பகுதியில் மக்கள் நடந்து செல்ல கூட முடியாமல் திணறுகின்றனர். ஆம்புலன்ஸ்கள் கூட அவசரத்திற்கு செல்ல முடியாமல் பாதையை மாற்றி வேறு வழியில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டூவீலர்களை ரோட்டோரங்களில் ஏன் நிறுத்துகிறீர்கள் என வாகன ஓட்டிகளிடம் கேட்கும் போது தகராறுகள் ஏற்படும் நிலையும் தொடர்கிறது. தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீசார் காலை,மாலை நேரங்களில் இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
.........
தடுக்க நடவடிக்கை
திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் எதிரே உள்ள மெயின் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன ஓட்டிகள் டூவீலர்களை நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் .
பிரதீப்,எஸ்.பி.,திண்டுக்கல்.

