/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
/
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
எங்கும் லொள்ளு, குடிகாரர்கள் தொல்லை பரிதவிப்பில் பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள்
ADDED : ஆக 01, 2024 05:15 AM

பழநி: எங்கும் நாய்கள் தொல்லை, குடிகாரர்கள் மதுவை குடித்து விட்டு அதன் பாட்டில்களை தெருவில் வீசி செல்லும் அவலம் என பழநி நகராட்சி 15 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
லட்சுமிபுரம், வள்ளலார் தெரு, ஓம்சக்தி கோயில் தெரு, ராஜா நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் கழிவு நீர் தேங்கி சுகாதாரசீர்க்கேட்டை ஏற்படுத்துகிறது.
பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாததால் இந்நிலை தொடர்கிறது . மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் கண்காணிப்பு கேமரா அமைப்பது அவசியமாகிறது . இங்குள்ள சாலைகளை அனைத்துப் பகுதிகளுக்கும் முறையாக அமைக்க வேண்டும்.
அவசியம் கேமரா
சரவணன்,விவசாயி, லட்சுமிபுரம்: லட்சுமிபுரம் பகுதியில் சாக்கடை இல்லாமல் சுகாதாரக் கேடு உள்ளது. சாலைகள் முறையாக இல்லாமல் மக்கள் பாதிக்கின்றனர். வார்டு பகுதிக்குள் விரைவாக சாக்கடை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜிகா பைப் திட்டத்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவும் பொருத்த வேண்டும்.
பூங்காவை சரி செய்யுங்க
மங்கையர்க்கரசி, குடும்பத் தலைவி, ராஜா நகர் : மது அருந்தி சாலையில் மது பாட்டில்களை உடைத்து செல்லும் நபர்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். பூங்காவை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நாய் தொல்லை அதிகம் உள்ளது.இரவு எட்டு மணிக்கு மேல் வீதிகளில் நடமாட முடியாத சூழல் ஏற்படுகிறது. அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிக்கலாமே
பாஸ்கர், தனியார் நிறுவன ஊழியர், லட்சுமிபுரம்: ரயில்வே தண்டவாளம் பகுதி அருகில் உள்ள சாலைகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. இவற்றை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். சாக்கடைகளை முறையாக அமைக்க வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று ஏற்படுவதை தடுக்கலாம். நாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை
கந்தசாமி, கவுன்சிலர் (நகராட்சி துணைத் தலைவர், மார்க்சிஸ்ட்): வார்டில் உள்ள ராஜா நகர் பூங்காவில் மேல்நிலைதொட்டி அமைக்கப்பட உள்ளது.
கட்டுமான பணிகள் நடைபெற்ற பின் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பாதுகாப்பு கருதி பூங்கா அடைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாய் தொல்லை குறித்து நகராட்சி கூட்டத்தில் பேசி உள்ளேன் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.