/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...
/
ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...
ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...
ரோடுகளில் ஏற்படும் பள்ளங்களால் பரிதவிக்கும் மக்கள்...
ADDED : ஆக 19, 2024 01:14 AM

சீர்கேடான பஸ் ஸ்டாப்
ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோடு கரட்டுப்பட்டி பஸ் ஸ்டாப்பில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ரங்கசாமி,கம்பளிநாயக்கன்பட்டி.-----ரோடு பள்ளத்தால் ஆபத்து
தென்னம்பட்டியிலிருந்து பிலாத்து செல்லும் வழியில் பூஞ்சோலை அருகே ரோடு வளைவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழித்தடத்தில் வரும் டூவீலர்கள் தடுமாறி விபத்தில் சிக்குகின்றன. ரோடு வளைவை அகலப்படுத்த வேண்டும். --- பிரகாஷ், வடமதுரை.-----
பயன்பாடில்லாத பூங்கா
கள்ளிமந்தையம்- ஒட்டன்சத்திரம் நான்கு வழிச்சாலையில் சின்னையகவுண்டன் வலசு அருகே நெடுஞ்சாலைத் துறை பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -கண்ணன் ஒட்டன்சத்திரம்.-----
அச்சுறுத்தும் குரங்குகள்
கோபால்பட்டி வேம்பார்பட்டியில் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர். குரங்குகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கடேச பெருமாள், வேம்பார்பட்டி.------
மக்களை துரத்தும் நாய்கள்
பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றுகின்றன. இதனால் பொதுமக்கள்,குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை அதிகாரிகள் எடுக்க வேண்டும். சண்முகம், பழநி.------குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் மாலப்பட்டி - தோட்டனுாத்து ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பையை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார், மாலப்பட்டி.------
கொசு உற்பத்தியாகும் கழிவுநீர்
பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெருவில் சாக்கடை கால்வாய் துார் வாராமல் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தி ஜோராக நடக்கிறது. அதிகாரிகள் கால்வாயை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துக்குமார்,பழநி. -------
......................................