/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...
/
ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...
ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...
ரோட்டில் செல்லும் கழிவுநீரால் அவதிப்படும் மக்கள்...
ADDED : ஜூன் 21, 2024 05:21 AM

சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விஸ்வநாதன், திண்டுக்கல்.---.......
விரிசலான ரோடுகள்
அய்யலுார் எரியோடு ரோட்டில் சித்துவார்பட்டி பகுதியில் புதிதாக அகலமாக்கப்பட்ட ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழித்தடங்களில் செல்லும் மக்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தபட்ட அதிகாரிகள் ரோடை சீரமைக்க வேண்டும். - ஜமால் முகமது அய்யலுார்.----........
நடுரோட்டில் மின்கம்பம்
திண்டுக்கல் ரேணுகாதேவி அம்மன் கோயில் தெருவில் நடுரோட்டில் மின்கம்பம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழித்தடங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்களை சந்திக்கின்றனர். மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்குமார், திண்டுக்கல்.------..........
மக்களை அச்சுறுத்தும் விளம்பர பலகை
நத்தம் திண்டுக்கல் நெடுஞ்சாலை எர்மநாயக்கன்பட்டி பகுதியில் பெரியளவிலான விளம்பர பலகை சேதமான நிலையில் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் எந்நேரமும் அச்சத்துடனே பயணிக்கும் நிலை தொடர்கிறது. சேதமான விளம்பர பலகையை அகற்ற வேண்டும். நிஷாந்த்,கே.அய்யாபட்டி.-------..........
--------.........
துார்வாராத கால்வாயால் பாதிப்பு
திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோட்டில் சாக்கடை கால்வாயில் குப்பை பிளாஸ்டிக் கழிவு அடைத்துள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளது. கால்வாயை துார்வார வேண்டும். வசந்தகுமார், திண்டுக்கல்.---------........
குப்பையால் உருவாகும் சீர்கேடு
திண்டுக்கல் சீலப்பாடி கணேஷ் நகர் கோதாவரி தெருவில் குப்பையை அகற்றாமல் அடிக்கடி தீவைத்து எரிக்கின்றனர். இதனால் கரும்புகை அப்பகுதி முழுவதும் பரவுகிறது. குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தா.சுரேஷ்குமார் கணேஷ்நகர்.---------
.............................................................