sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீர்தடம் ஆக்கிரமிப்பை அகற்றுங்க மருத்துவமனையை தரம் உயர்த்துக குறைதீர் கூட்டத்தில் மக்கள் முறையீடு

/

நீர்தடம் ஆக்கிரமிப்பை அகற்றுங்க மருத்துவமனையை தரம் உயர்த்துக குறைதீர் கூட்டத்தில் மக்கள் முறையீடு

நீர்தடம் ஆக்கிரமிப்பை அகற்றுங்க மருத்துவமனையை தரம் உயர்த்துக குறைதீர் கூட்டத்தில் மக்கள் முறையீடு

நீர்தடம் ஆக்கிரமிப்பை அகற்றுங்க மருத்துவமனையை தரம் உயர்த்துக குறைதீர் கூட்டத்தில் மக்கள் முறையீடு


ADDED : செப் 03, 2024 04:41 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றுங்க, மருத்துவமனையை தரம் உயர்த்துக உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக குறைதீர் கூட்டத்தில் 272 பேர் முறையிட்டனர்.

கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடனுதவியாக 6 பேருக்கு பெட்டிக்கடை வைக்க தலா ரூ.50,000, காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி கலெக்டரின் அலைபேசி வாட்ஸ்ஆப் வாயிலாக பெறப்பட்ட மனு மீது விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது.

ரெட்டியார்சத்திரம், தோப்புப்பட்டியில் ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட சசமுதாயக்கூடத்தின் நிர்வாகம், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக ஸ்ரீஅம்மன் மகளிர் சுயஉதவிக்குழுவினரிடம் சமுதாயக்கூடத்தின் சாவி வழங்கப்பட்டது.

மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சுபாஷினி, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள்கோட்டைக்குமார், செல்வம், துணை கலெக்டர் ராஜேஸ்வரி சுவி கலந்து கொண்டனர்.

கொசவப்பட்டியை அடுத்த டி.பஞ்சம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், செம்மடைப்பட்டி கல்குத்து ஓடைக்கு பேபி குளத்தில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது.

இதன் நீர்வழிப்பாதையை சிலர் ஆக்கிரத்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கேட்டிருந்தனர்.

மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கொடுத்த மனுவில், வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவு முறையாக செயல்படவில்லை.

விபத்தில் காயமடைபவர்கள் திண்டுக்கல்,மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் நிலை உள்ளது. இதை கருதி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என கேட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us