/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோயிலில் புரவி எடுப்பு
/
பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோயிலில் புரவி எடுப்பு
பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோயிலில் புரவி எடுப்பு
பெரியகருப்பு, சின்னக்கருப்பு கோயிலில் புரவி எடுப்பு
ADDED : மே 22, 2024 01:28 AM

நத்தம் : நத்தம் பட்டணம்பட்டியில் பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளின் புரவி எடுப்பு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நேற்று முன்தினம் ஊராளிபட்டி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஊர் மந்தையில் கண் திறக்க கோயிலுக்குள் சென்றது. அங்கு பெரியகருப்பு, சின்னக்கருப்பு, சக்தி ஏழு கன்னிமார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, முளைப்பாரி, மாவிளக்கு,கிடாய் வெட்டுதல், அங்கப்பிரதட்சணம் எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். நேற்று மாலையில் வர்ணகுடைகள்,தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கையோடு சுவாமிகள் ஊர்வலமாக பட்டணம்பட்டி மலை அடிவாரம் இருப்பிடம் போய் சேர்ந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

