/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்: காற்றில் பறக்கும் விதிமுறைகள்
/
'கொடை'யில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்: காற்றில் பறக்கும் விதிமுறைகள்
'கொடை'யில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்: காற்றில் பறக்கும் விதிமுறைகள்
'கொடை'யில் பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்: காற்றில் பறக்கும் விதிமுறைகள்
ADDED : ஏப் 10, 2024 05:36 AM

கொடைக்கானல் : கொடைக்கானல் வன சுற்றுலா தலத்தில் தடை பிளாஸ்டிக் பயன்பாடுகள் தாராளமாக புழக்கத்தில் உள்ளது.
கொடைக்கானல் வன சுற்றுலா தலங்களாக மோயர் சதுக்கம்,துாண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளன. இவை ஒருங்கிணைந்த வன மேம்பாட்டு சரகம் மூலம் பராமரிக்கப்படுகிறது.
இதற்காக ரேஞ்சர், வனவர்கள் நியமிக்கப்பட்டும், சுற்றுச்சூழல் காவலர்களும் பணியில் உள்ளனர். நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இப்பகுதியில் தடை செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்,பிளாஸ்டிக் உணவு பொட்டலங்கள்,பிளாஸ்டிக் பைகளில் அடைபட்ட உணவு பதார்த்தங்கள் என தாராளமாக பயன்பாட்டில் உள்ளது. ரோட்டில் வீசப்படும் பிளாஸ்டிக் உணவு பதார்த்தங்களால் வனவிலங்குகள், கால்நடைகள் பலியாவது குறித்து தினமலர் நாளிதழியை களை அகற்றி நடவடிக்கை எடுத்தது. நுழைவாயிலில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை நடத்தப்படும்.
வியாபாரிகளுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என வனத்துறை என எச்சரித்தது.
காணும் இடமெல்லாம் பிளாஸ்டிக் குவியல்களை காண முடிந்தது. வன சுற்றுலாத்தல பகுதியில் சுற்றுலா பணிகளை வீசி செல்லும் பிளாஸ்டிக் உணவுப் பொட்டலங்களை குரங்குகள், கால்நடைகள் தாராளமாக உண்ணும் நிலையை காண முடிந்தது.
வன சுற்றுலாத்தலங்களில் இயற்கையை பேணி காக்க வனத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

