/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் குவிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை
/
'கொடை' யில் குவிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை
ADDED : மார் 06, 2025 03:50 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் வனப்பகுதியில் குவிக்கப்படும் கட்டுமான கழிவு, பிளாஸ்டிக் குவியலால் சுற்றுச்சூழல் மாசடைந்தது.
கொடைக்கானலில் காட்டுமாடு, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
அந்திய மரங்களினால் மண்வளம் பாதித்து விலங்குகளுக்கு தேவையான உணவு சங்கிலி பாதித்தது. இதையடுத்து நகர் பகுதி , அடர் சோலை வனங்களை தேடி வன உயிரினங்கள் இடம் பெயர்கின்றன. கொடைக்கானல் நகரை ஒட்டிய பாம்பே சோலை வளப்பகுதியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கட்டுமான கழிவுகள், பிளாஸ்டிக் குப்பை குவிக்கப்படுகிறது.
தனியார் விடுதி கழிவுநீர் சென்று ஏரிக்கு செல்லும் நன்னீர் ஊற்று மாசடைகிறது. பிளாஸ்டிக் குப்பையில் இரை தேடும் வன உயிரினங்கள் செரிமான கோளாறால் பாதிக்கின்றன.
வனத்துறை விழிப்புணர்வுடன் தடுத்து சோலைக்காடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.