/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் துவங்கியது பிளம்ஸ் சீசன்
/
கொடைக்கானலில் துவங்கியது பிளம்ஸ் சீசன்
ADDED : மே 13, 2024 07:45 AM

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் பிளம்ஸ் பழங்களின் சீசன் துவங்கியுள்ளது.
மலைப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் பிளம்ஸ் பூக்கள் பூத்தன. இரு ஆண்டுகளாக சீதோஷ்ண நிலை மாற்றத்தால் பிளம்ஸ் விளைச்சல் பாதித்தது. கடந்தாண்டு 50 சதவீதம் குறைவாகவே பிளம்ஸ் பழங்கள் வரத்திருந்தன.
தற்போதும் விளைச்சல் குறைவாகவே உள்ள நிலையில் கொடைக்கானல், வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வடகவுஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பிளம்ஸ் சீசன் துவங்கியது. சீசன் ஜூலை வரை நீடிக்கும்.
தற்போது பறிக்கப்படும் பழங்கள் மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக ரூ.150க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.250க்கு விற்கப்படுகிறது.
கொடைக்கானல் வியாபாரி பேரின்பம் கூறுகையில் இரு ஆண்டுகளாகவே மாறிவரும் சீதோஷ்ண நிலையால் பிளம்ஸ் விளைச்சல் பாதித்தது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டபோதும், விவசாயிகளுக்கு பலன் அளிக்கவில்லை. பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றார் போல் விவசாயத்தை காக்க தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் இருக்கும் தருணத்தில் இவற்றை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.