/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளஸ் 1 மாணவன் தற்கொலை தலைமையாசிரியர் திட்டியதாக புகார்
/
பிளஸ் 1 மாணவன் தற்கொலை தலைமையாசிரியர் திட்டியதாக புகார்
பிளஸ் 1 மாணவன் தற்கொலை தலைமையாசிரியர் திட்டியதாக புகார்
பிளஸ் 1 மாணவன் தற்கொலை தலைமையாசிரியர் திட்டியதாக புகார்
ADDED : செப் 13, 2024 05:41 AM

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பூலத்துாரில் பிளஸ் 1 பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தொடர்பாக தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கும் நிலையில் தலைமையாசிரியர் திட்டியதால் தற்கொலை செய்ததாக மாணவன் தாய் புகார் தெரிவித்துள்ளார்.
பூலத்துாரை சேர்ந்தவர் அழகர்சாமி .இவரது மகன் ராஜபாண்டி 16. நிலக்கோட்டை அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பூலத்துாரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த நிலையில் அதன் மதிப்பெண் சான்றிதழ் பெற செப்.10 ல் ராஜபாண்டி பூலத்துார் அரசு பள்ளிக்கு சென்று வந்த நிலையில் ராஜபாண்டி வீட்டில் துாக்கிட்டு இறந்தார். ராஜபாண்டியின் தாய் முத்து பாண்டீஸ்வரி கூறுகையில்,'' பூலத்துார் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரபாண்டி திட்டி உள்ளார். மதிப்பெண் சான்றிதழையும் வழங்கவில்லை. எனது மகன் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் சவுந்தரபாண்டி தான் காரணம் . உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி கூறுகையில் ,'' விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
தலைமையாசிரியர் சவுந்தரபாண்டியை அலைபேசியில் அழைத்தபோது அழைப்பை எடுக்கவில்லை.
பூலத்துார் பள்ளியில் சவுந்தரபாண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் உள்ளார். பள்ளியில் சில மாதங்களுக்கு முன் ஹெட் போன் மாயமானது . அப்போதே மாணவரை கண்டித்துள்ளார். சான்று வாங்க சென்றபோது மாயமான ஹெட் போன் குறித்து மீண்டும் விசாரித்து கண்டிப்பு காட்டி உள்ளார் . இதன் காரணமாக மாணவர் தற்கொலை செய்துள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். இதன் உண்மை நிலையை அதிகாரிகள்,போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

