ADDED : மே 13, 2024 06:06 AM
ரயில் மோதி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் -அம்பாத்துரை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாளப்பகுதியில் மே 11ல் 60 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். இறந்தவர் நீல நிற சட்டை,நீல, வெள்ளை நிற கோடு கால்சட்டை அணிந்திருந்தார். தொடர்ந்து அவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
மிரட்டிய மூவர் கைது
திண்டுக்கல்:திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவிக்குமார் 22. இவர் நேற்று முன்தினம் சிறுமலை பிரிவு அருகே அவரது நண்பர் திருமூர்த்தி என்பவருடன் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வேடப்பட்டி அபிராமி நகர் நிர்வின் குமார் 26, கண்ணார் பட்டி தினேஷ்குமார் 19, நல்லாம்பட்டி காளியம்மன் கோவில் தெரு பிரேம்நாத் 19 ஆகியோர் ரவிக்குமாரை மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர். தாலுகா போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
கொலை வழக்கில் ஒருவர் கைது
ஒட்டன்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகன் 45. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டண கழிப்பறையில் சுத்தம் செய்யும் துாய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவர் நேற்று முன் தினம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் முருகனை, கொலை செய்த காந்திநகரை சேர்ந்த நாகராஜன் 25, என்பவரை கைது செய்து கொலைக்கான காரணம் குறித்துவிசாரிக்கின்றனர்.
நால்வருக்கு குண்டாஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூர் சி.கே.சி.எம்.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி வீராகவுதம். மார்ச்சில் இவரை திண்டுக்கல் சவேரியார் பாளையத்தை சேர்ந்த அருண்குமார்,அஜய்குமார்,சூர்யா,குடை பாறைப்பட்டியை சேர்ந்த மோகன்சுந்தர் ஆகியோர் கொலை செய்தனர். தெற்கு போலீசார் நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் நால்வர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பழநியில் மான்,பன்றி இறப்பு
பழநி : பழநி மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல விலங்குகள் வாழ்கின்றன. நேற்று வரதமாநதி அணை பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த மான் கால்வாய் பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் சிக்கியது. ஒட்டன்சத்திரம்,பழநி வனத்துறை,தீயணைப்பு துறையினர் வந்து மானை கயிறு கட்டி மீட்டனர். சிறிது நேரத்தில் மான் இறந்தது. இதேபோல் பொந்துபுளி பகுதியில் தனியார் தோட்டத்திலிருந்த 40 அடி கிணற்றில் 2 காட்டு பன்றிகள் விழுந்தது. பழநி வனத்துறையினர் மீட்டனர். அதில் காட்டு பன்றி ஒன்றுஇறந்தது.