sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்........

/

போலீஸ் செய்திகள்........

போலீஸ் செய்திகள்........

போலீஸ் செய்திகள்........


ADDED : ஜூலை 07, 2024 02:53 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகராறு இருவர் கைது

வேடசந்துார்: வேடசந்துார் கோடாங்கிபட்டியில் சுப்பம்மாள் என்ற மூதாட்டி இறந்ததை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது வேல்முருகன் 41, என்பவரது தரப்பினரால், ஊர்வலத்தில் பிரச்சனை ஏற்பட்டது. நுாற்பாலையில் லோடுமேனாக பணிபுரியும் ராஜேஷ் குமார்38, என்பவர் அதை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன், கார்வேந்தன் 28, பிரேம் 21, வெற்றிவேல் 19, மணிகண்டன் 22, அஜித்குமார் 20, ஜெயக்குமார் 21 ஆகியோர் தாக்கியதில் ராஜேஷ் குமார்,கார்த்திக் 35, சுப்பம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் 7 பேர் மீது வழக்கு பதிந்து வேல்முருகன்,கார்வேந்தன் இருவரை கைது செய்து மற்றவர்களை தேடுகிறார்.

விபத்தில் பலி

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பிலீஸ்புரம் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 70. அனுபவ ஓமியோபதி மருத்துவராக கிராமப்புறங்களில் பணியாற்றினார். நேற்று டூவீலரில் விராலிப்பட்டி சென்ற போது பழைய வத்தலக்குண்டு அருகே பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

கஞ்சா வழக்கில் கைது

பட்டிவீரன்பட்டி:- நெல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் பட்டிவீரன்பட்டி போலீசார் ஜூன் 29ல் ரோந்து சென்ற போது 2 டூவீலரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 பேர் அமர்ந்திருந்தனர். போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடினர். அதில் 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20 கிலோ கஞ்சா, 2 டூவீலர்கள், 3 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அய்யம்பாளையம் சூரியங்குளத்தைச் சேர்ந்த விஜயகுமாரை 26 நேற்று செம்பட்டியில் போலீசார் கைது செய்தனர்.

கண்டக்டரை தாக்கிய இருவர் கைது

வடமதுரை: நல்லமனார்கோட்டை மந்தக்குடும்பன்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி 24, திண்டுக்கல் கொம்பேறிபட்டி தனியார் பஸ்சில் டிரைவராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு கொம்பேறிபட்டியிலிருந்து திண்டுக்கல் சென்றபோது தென்னம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ் செல்லும் வழியில் பிலாத்து ஸ்டாலின் 38, தனது காரை நிறுத்தினார். காரை எடுக்க பஸ் கண்டக்டர் மனோஜ்குமார், ஸ்டாலினிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமான ஸ்டாலின், அவரது நண்பர் காளிதாஸ் 43 ஆகியோர் பஸ்சில் ஏறி டிரைவர், கண்டக்டரை தாக்கினர். தாக்கிய இருவரையும் வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.

விபத்தில் பெண் பலி

கன்னிவாடி: தருமத்துப்பட்டி கோம்பையை சேர்ந்த விவசாயி ராமுவேலு 52. பன்றிமலை ரோட்டில் உள்ள தோட்டத்திலிருந்து தருமத்துப்பட்டி நோக்கி நடந்தபோது, புதிய நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். கோவையிலிருந்து நிலக்கோட்டை நோக்கி சென்ற கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். டிரைவர் மணிகண்டன், காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். கன்னிவாடி போலீசார், விசாரிக்கின்றனர்.

அரசு பஸ் மோதி பலி

அம்பிளிக்கை: அம்பிளிக்கை செரியன் நகரைச் சேர்ந்தவர் நவநீத ராஜேஷ்குமார் 21. நவக்கானி பிரிவு அருகே டூவீலரில் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோடை கடக்க முயன்றார்.

அப்போது மதுரையிலிருந்து திருப்பூர் சென்ற அரசு பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us