ADDED : ஜூலை 08, 2024 12:18 AM
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
நத்தம்: நத்தம் சேத்துார் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது சேத்துார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற கண்ணனை 38, போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கள், ரூ.8 ஆயிரம் பணம் அலைபேசியை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்பனை:நால்வர் கைது
கொடைக்கானல்: கொடைக்கானலில் கஞ்சா வைத்திருந்த தேனி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சரவணன் 20, விக்னேஷ் 19, இருவரும் கஞ்சா வைத்திருந்தனர். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தலா 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் பழநி ராமநாத நகரை சேர்ந்த துர்க்கை பிரசாத் 25, கோட்டைமேடு தெருவை சேர்ந்த சித்திக் 25, வெவ்வேறு பகுதிகளில் கஞ்சா விற்றனர். போலீசார் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.