ADDED : ஜூன் 21, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: குட்டம் முடிமலைநாதர் கோவில் அடிவாரம் கரட்டு தோட்டத்தில் வசிப்பவர் விவசாயி உதயகுமார் 44. தோட்டத்தில் 5 கறவை மாடுகளை வளர்க்கிறார்.
நேற்று காலை அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நவீன் என்பவர், அவ்வழியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 1 கறவை மாட்டை பிடித்து நடந்து சென்றார். அக்கம்பக்கத்தினர் அந்த மர்ம நபரை பிடித்து விசாரித்த போதும் முறையான பதில் இல்லை.
மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்தார். வேடசந்துார் எஸ்.ஐ., பாண்டியன் விசாரிக்கிறார்.