ADDED : ஜூன் 22, 2024 05:58 AM
மது விற்ற மூவர் கைது
திண்டுக்கல்: மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் ஆல்வின்29,லுார்துசாமி47. நீண்ட நாட்களாக மது விற்றனர். தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். உசிலம்பட்டி பகுதியில் நிலக்கோட்டை முருகவேல்35, மது விற்றது தெரிந்தது. மது விலக்கு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
தொழிலாளி தற்கொலை ;மறியல்
திண்டுக்கல்: தாடிக்கொம்பு ஆலக்குவார்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வையாபுரி. அப்பகுதி தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்கிறார். நேற்று முன்தினம் தோட்டத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இறப்பில் மர்மம் இருப்பதாகவும் முறையாக விசாரிக்க கோரி திண்டுக்கல் திருச்சி ரோட்டில் மறியிலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்த கலைந்து சென்றனர்.
கத்திகுத்து ; நால்வர் மீது வழக்கு
தாடிக்கொம்பு: அகரம் பாப்பனம்பட்டியை சேர்ந்தவர் தினேஷ் 38. இவரது சித்தப்பா மனோகரன் மகள் சவுமியாக்கும் கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆன கார்த்திக் உடன் பழக்கம் உள்ளது. விருப்பப்படி கார்த்திக் உடன் முறைப்படி திருமணம் செய்து கொள் என தினேஷ், அவரது சித்தப்பா குடும்பத்தினர் கூறி உள்ளனர். சவுமியா காதலர் கார்த்திக்கிடம் கூறி உள்ளார். கார்த்திக்,அவரது தம்பி சந்திரன், அதே ஊரைச் சேர்ந்த பாண்டி ஆகியோர் தினேஷை தாக்கி, கத்தியால் குத்தினர்.
இளைஞர் தற்கொலை
சாணார்பட்டி : வேம்பார்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி யூஜின் பிரபு 27. சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். மனமுடைந்த யூஜின் பிரபு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.