வாலிபர் தற்கொலை
திண்டுக்கல்: சிறுமலை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதீஷ்குமார்35. திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு இருந்தது. மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் ரங்க சமுத்திரப்பட்டியை சேர்ந்தவர் வீரமணி 30. சட்டவிரோதமாக மது விற்ற இவரை தாலுகா போலீசார் கைது செய்து,21 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
டூவீலரில் வந்து ஆடு திருட்டு
வேடசந்துார்: குட்டம் ஊராட்சி கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி முத்தம்மாள் 68. தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு டூவீலரில் வந்த இருநபர்கள் ஒரு ஆடை திருடி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
வேடசந்துார் : வேடசந்துார் எஸ்.எஸ்.ஐ., கோபால் தலைமையில் போலீசார் லட்சுமணன்பட்டி நான்கு வழிச்சாலை அருகே சென்றபோது டூவீலரில் பையுடன் உட்கார்ந்திருந்த சேடப்பட்டி செல்வம், ஆத்துார் பெருமாள்கோவில்பட்டி தனராஜ் ஆகியோரிடம், 16 வயது கொண்ட இரு சிறுவர்கள் மது பாட்டில்களை வாங்கினர். போலீசார் சென்றபோது செல்வம் தப்பினார். தனராஜை கைது செய்ய போலீசார் 40 பாட்டில்கள், டூ வீலரை பறிமுதல் செய்தனர்.
தாடிக்கொம்பு: எஸ்.எஸ்.ஐ., தனம் தலைமையிலான போலீசார் சென்னமநாயக்கன்பட்டி கடையில் தடை புகையிலை விற்பனை செய்வதை கண்டனர் . கடை உரிமையாளர் ராஜாத்தி 62, மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர்.அதன்படி தாடிக்கொம்பு எஸ் ஐ., பாக்கியசாமி விசாரிக்கிறார்.
டிப்பர் லாரி, -பைக் மோதல்
நத்தம்: பாப்பாபட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கனகராஜ் 50. டூவீலரில் நத்தம் ஆர்.சி.பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த லாரி மோதியது. கனகராஜ் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி பலி
நிலக்கோட்டை: அணைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். சொக்குபிள்ளைபட்டியில் உள்ள உறவினர் தென்னந்தோப்பிற்கு சென்றார். தோப்பிற்குள் நடந்து சென்ற போது மின் கம்பி அறுந்து நாகராஜ் மீது விழ பலியானார். விளாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி தொழிலாளி பலி
வடமதுரை : திருச்சி மாவட்டம் மருங்காபுரி எண்டப்புளி காலனி தெருவை சேர்ந்த தப்பாட்ட தொழிலாளி தர்மதுரை 29. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகில் சென்ற போது அரசு பஸ் மோதி இறந்தார். முதியவர் தற்கொலை
நத்தம்: முளையூரை சேர்ந்தவர் ரெங்கசாமி 65. சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மன உளைச்சலில் இருந்த அவர் ஜூன் 18 ல் பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.