sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்...........

/

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........

போலீஸ் செய்திகள்...........


ADDED : ஜூலை 15, 2024 04:10 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாரி மோதி விபத்து

தாடிக்கொம்பு:நாமக்கல் மாவட்டம் பெரியபட்டி கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்த லாரி டிரைவர் அசோக்குமார். இவர் நாமக்கல்லிலிருந்து துாத்துக்குடி நோக்கி கேஸ் டேங்கர் லாரியை ஓட்டினார்.கரூர் மதுரை நெடுஞ்சாலை திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானம் எதிரில் அதிகாலை வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அருகிலிருந்த சென்டர் மீடியன்,ஊர் பெயர் பலகை மீது மோதியது. இதில் டிரைவர் அசோக்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாடிக்கொம்பு எஸ்.ஐ., அழகர்சாமி விசாரிக்கிறார்.

கஞ்சா வைத்தவர்கள் கைது

கொடைக்கானல்: கொடைக்கானல் வனத்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் பூம்பாறை சந்திப்பு கோசன் ரோட்டில் டூவீலரில் வந்த மூவரை சோதனை செய்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த அதுல் 22, கூக்காலை சேர்ந்தவர்கள் மோகன்ராஜ் 25, ராமகிருஷ்ணன் 20,என்பதும் அவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்ததும் தெரிந்தது. டி.எப்.ஒ.,யோகேஷ் குமார் மீனா, உதவி வனப் பாதுகாவலர் சக்திவேல் உத்தரவில் கொடைக்கானல் போலீசில் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.

பெண்ணிற்கு முதல் உதவி

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் காய்கறி கடை வைத்திருப்பவர் பாலமுருகன். குடும்பத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு டூவீலரில் சென்று விட்டு ஊர் திரும்பினார். பரசுராமபுரம் அருகே மனைவி மணிமேகலையின் துப்பட்டா டூவீலரில் சிக்கி துாக்கி வீசப்பட்டு காயம் அடைந்தார். வலியால் துடித்த மணிமேகலைக்கு அவ்வழியாக சென்ற கோவையை சேர்ந்த டாக்டர் செல்வராஜ், முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பெண் தற்கொலை

வேடசந்துார்: வேடசந்துார் ஐயர்மடத்தை சேர்ந்தவர் தனலட்சுமி 40. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், கணவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்தார். 2 ஆண்டுகளுக்கு முன் சாலையூர் நால்ரோட்டை சேர்ந்த மனோஜ்குமார் 25, என்பவருடன் சுள்ளெறும்பு நால்ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். 9 மாத பெண் குழந்தை உள்ளது. அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த தனலட்சுமி, வீட்டில் விஷ காயை தின்று தற்கொலை செய்தார்.






      Dinamalar
      Follow us