ADDED : ஜூன் 01, 2024 05:46 AM
வழிப்பறி செய்த மூவர் கைது
வடமதுரை : திண்டுக்கல் குழந்தைபட்டியை சேர்ந்த பாலமுருகன் 40, பாறைப்பட்டி காப்பிளியபட்டி ரோட்டில் டூவீலரில் சென்றபோது அவரை வழிமறித்த மூவர் அரிவாளை காட்டி ரூ. 200, டூவீலரை பறித்து கொண்டு தப்பினர். வடமதுரை போலீசார் விசாரணையில், வன்னியபாரைப்பட்டி சொக்கன் 31, பஞ்சம்பட்டி பாஸ்கர் 36, திண்டுக்கல் லட்சுமிநாயக்கன்பட்டி கார்த்திபன் 21 ,என்பது தெரிய மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீதும் திண்டுக்கல், திருச்சி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
பால் வியாபாரி பலி
வடமதுரை : செங்குறிச்சி கம்பிளியம்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி சுப்பிரமணி 70. திண்டுக்கல் செந்துறை ரோட்டில் டூவீலரில் சென்ற போது (ஹெல்மெட் அணியவில்லை) மற்றொரு டூவீலர் மோதியதில் இறந்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.