/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் செய்திகள் போக்சோவில் கைது
/
போலீஸ் செய்திகள் போக்சோவில் கைது
ADDED : மார் 06, 2025 03:40 AM
போக்சோவில் கைது
பழநி : பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் 27. 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். பழநி தாலுகா போலீசார் ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பேட் டச்; ஒருவர் கைது
திண்டுக்கல்: பழநி ரோடு முருகபவனம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மைக்கேல் ராஜ்63. நேற்று அதே பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியிடம் பேட் டச் செய்தார். திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் மைக்கேல்ராஜை கைது செய்தனர்.
கணவன் மனைவி மீது வழக்கு
குஜிலியம்பாறை: டி.கூடலுார் ஊராட்சி எஸ். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் முதியவர் தங்கவேல் 60. ஆடு மேய்த்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர், தங்கவேலுடன் ஏற்பட்ட தகராறில், தங்கவேலுவை தடியால் தாக்கினார். பழனிசாமி மனைவி இளஞ்சியமும், தங்கவேலுவை கடுமையாக பேசினார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., விஜயலிங்கம், தங்கவேலுவை தாக்கிய, பழனிசாமி அவரது மனைவி இளஞ்சியம் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.
இளம் பெண் தற்கொலை
நிலக்கோட்டை: கே.குரும்பபட்டியை சேர்ந்தவர் சித்திரவேல் மகள் நித்திய ரூபிணி 18. நர்சிங் படித்தார். இவரும், உறவினர் பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசீலனும் 23 காதலித்தனர். இதையறிந்த இருவரின் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் திருப்பூரில் கட்டட வேலை செய்து பார்த்த ஜெயசீலன், சில நாட்களுக்கு முன்பு கட்டடம் விழுந்து இறந்தார். சோகத்தில் இருந்த நித்திய ரூபிணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.