நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் நோக்கில் போலீசார் சார்பில் நடந்த விழிப்புணர்வு அணிவகுப்பினை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.திண்டுக்கல் ரவுண்ட்ரோடுபுதுாரில் தொடங்கிய இதற்கு எஸ்.பி., பிரதீப் முன்னிலை வகித்தார்.
பல்வேறு பகுதி வழியாக வந்து எம்.வி.எம்., கல்லுாரி அருகில் முடிந்தது. ஏ.டி.எஸ்.பி., மகேஸ்வரன், ஏ.எஸ்.பி., சிபின், மத்திய பாதுகாப்பு படையினர் என 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏ. டி.எஸ்.பி., தெய்வம் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., மதுமதி, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், துணை ராணுவத்தினர் என நுாற்றுக்கு மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

