/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்
/
மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன்
ADDED : மே 24, 2024 03:40 AM
குஜிலியம்பாறை: மணியக்காரன்பட்டி பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் பச்சை மண் பானையில் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
உல்லியக்கோட்டை மணியக்காரன்பட்டி பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா 3 நாட்கள் நடந்தது. கழுகு நாடு குல பங்காளிகளுக்கான காப்பு கட்டுதல், கரூர் காவிரி ஆறு சென்று தீர்த்தம் எடுத்தல், சுவாமி அழைத்தல், கரகம் பாலித்தல், வான வேடிக்கை, பொங்கல் , கிடா வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. சுடப்படாத பச்சை மண் பானையில் அனைவரும் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள் சங்கர், செந்தில்நாதன், தங்கப்பாண்டியன், கோவில் முக்கியஸ்தர்கள் சக்திவேல், வடிவேல், கணேசன் செய்திருந்தனர்.