sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக்கிரமிப்பில் குளங்கள்; பாதங்களை நோகடிக்கும் ரோடு வேதனையில் வேல்வார்கோட்டை ஊராட்சி மக்கள்

/

ஆக்கிரமிப்பில் குளங்கள்; பாதங்களை நோகடிக்கும் ரோடு வேதனையில் வேல்வார்கோட்டை ஊராட்சி மக்கள்

ஆக்கிரமிப்பில் குளங்கள்; பாதங்களை நோகடிக்கும் ரோடு வேதனையில் வேல்வார்கோட்டை ஊராட்சி மக்கள்

ஆக்கிரமிப்பில் குளங்கள்; பாதங்களை நோகடிக்கும் ரோடு வேதனையில் வேல்வார்கோட்டை ஊராட்சி மக்கள்


ADDED : செப் 03, 2024 04:49 AM

Google News

ADDED : செப் 03, 2024 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : சேதமான குடிநீர் மேல்நிலை தொட்டிகள், கட்டடங்கள், நிறுத்தப்பட்ட மினி பஸ் சேவை, ஆக்கிரமிப்பில் சிக்கிய குளங்கள் என வேல்வார்கோட்டை ஊராட்சி மக்கள் வேதனையில் உள்ளனர்.

சீலப்பாடியான்களம், வெள்ளபொம்மன்பட்டி, சேர்வைகாரன்பட்டி, ராஜகவுண்டன்பட்டி, ஊராளிபட்டி, மூனாண்டிபட்டி, முத்தனாங்கோட்டை, கொட்டத்துறை, புதுப்பாளையம், புதுகளராம்பட்டி, வேல்வார்கோட்டை, பழைய களராம்பட்டி, செட்டியபட்டி, போலாச்சிரெட்டிபட்டி, சங்கராபுரம், கோகுல் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் முத்தனாங்கோட்டை, வேல்வார்கோட்டை, புதுகளராம்பட்டி கிராம அங்கன்வாடி மையங்கள் சேதமான நிலையில் வாடகை கட்டடத்தில் செயல்படுகின்றன.

வெள்ளபொம்மன்பட்டி கால்நடை கிளை நிலைய கட்டடம் 60 ஆண்டுகளாக சேதமான நிலையில் உள்ளது.

போலாச்சி ரெட்டிபட்டி நீர்தொட்டியின் துாண்கள் சிதைந்து விபத்து நோக்கி உள்ளது.

சீலப்பாடியான் களத்தில் இடிக்கப்பட்ட மேல்நிலைத்தொட்டிக்கு மாற்றாக புதிய தொட்டி கட்டி தரப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

--சர்வீஸ் ரோடு இல்லாது அவதி


இ.சுப்புராம், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர்: தாடிக்கொம்பு வடமதுரை மினிபஸ் சேவை நிறுத்தப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

வெள்ளபொம்மன்பட்டி காணப்பாடி செல்லும் ரோடு நான்கு வழிச்சாலை இணைக்க சர்வீஸ் ரோடு இல்லாததால் அரை கி.மீ., துாரம் எதிர்திசையில் ஆபத்தாக பயணிக்கும் நிலை உள்ளது.

கழிவுகளால் மாசு


சி.தெய்வேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் (அ.தி.மு.க.,): வேல்வார்க்கோட்டையை சுற்றிய அனைத்து குளங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. மழை நேரத்தில் கிடைக்கும் நீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது.

முத்தனாங்கோட்டை ரோடு பிரிவில் இரு மின்கம்பங்கள் சேதமான நிலையில் உள்ளன. முத்தனங்கோட்டை பகுதியினர் மயானத்திற்கு செல்ல இரு ரயில்பாதைகளை கடப்பதால் விபத்து ஆபத்து உள்ளது.

இங்கு சுரங்கப் பாதை அமைக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகளால் குளங்கள் மாசுப்பட்டு நீரின் தன்மை மாறி வருகிறது.

திட்ட பணிகள் தயார்


ஆர்.முனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் (தி.மு.க.): ஊராட்சியில் சிமென்ட் ரோடு, வடிகால் கட்டமைப்பு, பாலம், ரோடு, பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி களிலும் சமையலறை மராமத்து செய்து குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு துறைகள் மூலம் மக்களுக்கு தேவையான திட்ட பணிகளை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வந்துள்ளேன்.

செய்ய வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகளை பட்டியலாக ஒன்றிய நிர்வாகத்திடம் தந்துள்ளேன். நிதி ஒதுக்கீடு வரும்போது ஒவ்வொரு பணியாக செய்வார்கள் என நம்புகிறேன்.

-பாரபட்சமின்றி பணி


ஐ.அங்கம்மாள்ஐயப்பன், ஊராட்சித்தலைவர், சேர்வைகாரன்பட்டி: கோகுல் நகர், சங்கராபுரம், அண்ணா நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டி உள்ளோம்.

புதுக்கலராம்பட்டி, முத்தனாங்கோட்டை கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

வேல்வார்கோட்டை, கொட்டத்துறை, செட்டியபட்டி சேர்வைக்காரன்பட்டி கிராமங்களில் சாக்கடை அமைத்துள்ளோம். ஊராளிபட்டி, வெள்ளபொம்மன்பட்டி, வேல்வார்கோட்டை பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டி தந்துள்ளோம்.

கிடைக்கும் திட்ட நிதி ஆதாரங்களை கொண்டு பாரபட்சமின்றி வளர்ச்சி பணிகளை செய்கிறோம் என்றார்.






      Dinamalar
      Follow us