/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா தேவி யாகம்
/
உலக நன்மை வேண்டி பிரத்யங்கிரா தேவி யாகம்
ADDED : மே 08, 2024 05:36 AM

கோபால்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை அமாவாசையான நேற்று நடந்த பிரத்தியங்கிரா தேவி மிளகாய் யாகத்தை சபையின் நிர்வாகி திரு வேங்கட ஜோதி பட்டாச்சாரியார் செய்து வைத்தார்.
இதையொட்டி நேற்று காலை முதல் சபையில் வளர்க்கப்படும் 50க்கு மேற்பட்ட பல்வேறு வகை நாட்டு மாடுகளுக்கு பக்தர்கள் அகத்திக்கீரை ,உணவுகள் வழங்க கோ பூஜை நடந்தது.
மாலையில் மடத்தில் உள்ள யாகசாலையில் நரசிம்மர் கலசங்கள் பூக்களால் அலங்கரிக்க பிரத்தியங்கிரா தேவி அம்மன் பூக்கள் அலங்காரத்தில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடந்தது .
சபையின் நிர்வாகி டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் வேத மந்திரம் முழங்க யாகுண்டத்தில் மூடை மூ்டையாக மிளகாய் வத்தலை கொட்ட உலக நன்மை வேண்டி பிரத்தியங்கிரா தேவி யாகம் நடத்தப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

