/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை
/
ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை
ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை
ரூ.4 லட்சம் கடனை திருப்பித்தராத தலைமையாசிரியைக்கு சிறை
ADDED : செப் 11, 2024 01:47 AM
திண்டுக்கல்:உறவினரிடம் கடனை திருப்பி தராத அரசு பள்ளி தலைமையாசிரியைக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு அங்குநகரை சேர்ந்தவர் பாண்டி 69. இவரிடம் உறவினரான நிலக்கோட்டை அணைப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியையாக உள்ள மாலா 56, கடந்த 2021ல் ரூ.4 லட்சம் கடனாக வாங்கினார். சில மாதங்கள் பின் வாங்கிய கடனை கேட்டார். மாலா முறையாக பதிலளிக்காமல் இழுத்தடித்தார்.
இதனால் பாண்டி திண்டுக்கல் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீ நித்யா ஆஜராகி வாதாடினார். இதனை விசாரித்த நீதிபதி பிரியா, கடன்வாங்கி திரும்ப தராத மாலாவுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை, அவர் நஷ்ட ஈடாக ரூ.4 லட்சம் பாண்டிக்கு வழங்க உத்தரவிட்டார்.