/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
/
கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
ADDED : மே 16, 2024 05:33 AM
கன்னிவாடி : ''ஆத்துார், கன்னிவாடி கலைக்கல்லுாரிகளில் கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக,''அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
ரெட்டியார்சத்திரம், ஆத்துார் ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமத்தினர் பல்வேறு பிரச்னைகளுக்காக அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து மனுக்கள் அளித்து வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பு குறித்த கோரிக்கை அதிகரித்து வருகிறது. மனுக்களை பெற்ற அவர் கூறியதாவது: கிராம மாணவர்களின் உயர் கல்வி நோக்கத்திற்காக ஆத்துார் ஒன்றியத்தில் கூட்டுறவு கலைக் கல்லுாரி, கன்னிவாடியில் அரசு கலைக் கல்லுாரியும் ஏற்படுத்தப்பட்டது. இவற்றில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் கல்வி செலவை ஏற்று கட்டணமின்றி படிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. சேர்க்கைக்கு எந்த சிபாரிசும் தேவை இல்லை. கிராம மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். அடுத்தாண்டு முதல் ஆத்துார் கல்லுாரியில் கூடுதலாக ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்கும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றார்.தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், முருகேசன் உடன் இருந்தனர்.