ADDED : ஜூலை 15, 2026 07:31 PM
திண்டுக்கல், ஜூலை 16
‘‘மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (ஜூலை 17ல்) காலை 10:00 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது’’ என கலெக்டர் துர்கா அறிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
முகாமில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களது கல்விச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, புகைப்படம், சுய விவரங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் நேரில் பங்கேற்கலாம்.
தனியார் துறை வேலையளிப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரம், தொழிற்பழகுநர் பயிற்சிக்கு தேவைப்படும் பணியாளர்களின் விபரத்தை திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
முகாமில் பங்கேற்க விரும்புவோர் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்தும் திண்டுக்கல் எம்ப்ளாய்மென்ட் ஆபிஸ் எனும் டெலிகிராம் சேனலில் இணைந்து பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முகாமின் மூலம் பணியில் சேரும் விண்ணப்பதாரரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
