ADDED : ஜூலை 15, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி, ஜூலை 16-
காந்திகிராமத்தில் பல்கலையின் மனையியல் துறை, இந்திய எழுத்தறிவு திட்ட கள ஆய்வுகள் அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது.
பல்கலைத் துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புஷ்பா, ஆத்துார் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி, திட்ட ஆராய்ச்சியாளர் கவிதா மைதிலி, முதன்மை ஆராய்ச்சியாளர் தாஹிரா பானு முன்னிலை வகித்தனர்.
சமச்சீர் உணவு, தாய்க்கான ஊட்டச்சத்து, இளம் குழந்தைகள், சிறுவர்களுக்கான உணவூட்டும் முறை, உணவு பாதுகாப்பு, உணவு சுகாதாரம், ஊட்டச்சத்து கல்வி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விளக்கப்பட்டது.
