/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுதந்திரதினத்தில் 100 பேருக்கு பரிசு:மாநகராட்சி முடிவு
/
சுதந்திரதினத்தில் 100 பேருக்கு பரிசு:மாநகராட்சி முடிவு
சுதந்திரதினத்தில் 100 பேருக்கு பரிசு:மாநகராட்சி முடிவு
சுதந்திரதினத்தில் 100 பேருக்கு பரிசு:மாநகராட்சி முடிவு
ADDED : ஆக 13, 2024 07:19 PM

திண்டுக்கல்;திண்டுக்கல்லில் வீட்டில் எஞ்சிய குப்பையை உரமாக்கி மாடி தோட்டம் அமைத்து அசத்திய 100 பேரை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக சுதந்திரதின விழாவில் பரிசு வழங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. குப்பையை தினமும் பெறும் வகையில் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை பெற்று கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் கண்ட இடங்களில் பொது மக்கள் குப்பையை வீசி செல்லக்கூடாது என்பதற்காக குப்பை தொட்டிகளை முழுவதையும் அகற்றி அது இருந்த பகுதிகளை சுத்தம் செய்து கோலம் போட்டு வைத்துள்ளனர். இதில் இயற்கை விவசாயத்தின் மீது ஆர்வமுள்ள சில குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உருவாகும் மக்கும் கழிவுகளை பயன்படுத்தி அதை உரமாக மாற்றி வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகளை தயாரித்துள்ளனர்.
இதைதெரிந்து கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தினர் அடிக்கடி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நேரில் அழைத்து பாராட்டினர். இதைபார்த்து பலரும் இதேநிலையை கடை பிடித்து தங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை உற்பத்தி செய்துள்ளனர். இவர்களில் 100 பேரை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆக.15ல் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் நடக்கும் சுதந்திரதின விழாவில் நேரில் அழைத்து பரிசு வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்கான லிஸ்ட் தயாரிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

