/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தண்ணீர் தேங்குவதில் சிக்கல்: குளங்களில் அரசு விதிகளை மீறி மண் திருட்டு
/
தண்ணீர் தேங்குவதில் சிக்கல்: குளங்களில் அரசு விதிகளை மீறி மண் திருட்டு
தண்ணீர் தேங்குவதில் சிக்கல்: குளங்களில் அரசு விதிகளை மீறி மண் திருட்டு
தண்ணீர் தேங்குவதில் சிக்கல்: குளங்களில் அரசு விதிகளை மீறி மண் திருட்டு
ADDED : ஆக 03, 2024 05:02 AM

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வண்டல் மண் , மணல் திருட்டு தொடர் கதையாக உள்ளது.
வண்டல் மண்ணை அள்ளிச் செல்ல முறையான அனுமதி இல்லாத நிலையில் சீட்டு போட்டு ஓட்டுவதாக, மண் திருட்டில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். அந்த சீட்டை யார் வழங்குகிறார்கள் ? எங்கே வழங்குகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய், குளங்களில் விவசாயம் , மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு கட்டணம் இல்லாமல் அனுமதி சீட்டின் (டோக்கன்) அடிப்படையில் குறிப்பிட்ட அளவிலான வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசின் உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு தாலுகா பகுதிகளில் தொடர்ச்சியாக வண்டல் மண் திருட்டு நடைபெற்று வருகிறது. வருவாய்த்துறை அதிகாரிகளே சென்றாலும் டோக்கன் போட்டு அள்ளி செல்வதாக கூறுகின்றனர்.
அதையும் மீறி வாகனங்களை வருவாய்த் துறையினர் பிடித்தாலும் அரசியல் தலையீடு காரணமாக வாகனங்களை விட்டு விடும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படுகின்றனர். நமக்கு ஏன் வம்பு என இவர்களும் ஒதுங்கி கொள்கின்றனர்.
வண்டல் மண் திருட்டை முற்றிலுமாக தடுக்க ஒரே வழி வருவாய்த்துறையினர் ,போலீசார் இணைந்து வண்டல் மண் அள்ளும் வாகனங்களை பறிமுதல் செய்து உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும். மீண்டும் அதே திருட்டில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல் மண் திருடர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனி டீம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
வலுவான சட்டங்களை கையில் வைத்துக்கொண்டு அதை பயன்படுத்தாமல் இருக்கும் வரை இது போன்ற திருட்டுக்கள் தொடரத்தான் செய்யும்.