ADDED : ஜூலை 20, 2024 12:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : நத்தம் என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
போலீஸ் துணைகண்காணிப்பாளர் மகேஷ் தொடங்கி வைத்தார். என்.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் தபசு கண்ணன், நர்சிங் கல்லுாரி முதல்வர் அன்னலெட்சுமி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், கார்த்திகா, இன்ஸ்பெக்டர் சத்தியராஜ் பேசினர். விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.