/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திடக்கழிவுகள் மூலம் 910 கிலோ இயற்கை ,மண்புழு உரம் தயாரிப்பு
/
திடக்கழிவுகள் மூலம் 910 கிலோ இயற்கை ,மண்புழு உரம் தயாரிப்பு
திடக்கழிவுகள் மூலம் 910 கிலோ இயற்கை ,மண்புழு உரம் தயாரிப்பு
திடக்கழிவுகள் மூலம் 910 கிலோ இயற்கை ,மண்புழு உரம் தயாரிப்பு
ADDED : ஆக 04, 2024 06:25 AM

திண்டுக்கல் : ''பேரூராட்சிகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளில் ஒன்றான ஈரக்கழிவுகள் மூலம் நாளுக்கு 840 கிலோ இயற்கை உரம், 70 கிலோ மண்புழு உரம் தயார் செய்யப்படுகிறது ''என பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜா தெரிவித்தார்.
பேரூராட்சி துறையின் நோக்கம்
பேரூராட்சிகள் என்பது உள்ளாட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு இடையிலான இடைநிலை அமைப்பாக உள்ளது. இத்துறையின் மூலம் பொது மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம், ரோடுகள், தெருவிளக்குகள், வடிகால்கள், பிறப்பு - இறப்பு சான்று வழங்குதல், கட்டட அனுமதி போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் மயானங்கள், எரிவாயு தகனமேடைகள், பஸ் ஸ்டாண்ட், பொது கழிப்பறைகள் , சந்தைகள், சமுதாய கூடம் போன்றவை பேரூராட்சி துறையின் மூலம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை செயல்பாடு ...
மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சி திடக்கழிவுகள் நாள் ஒன்றுக்கு 93.734 டன் சேகரிக்கப்படுகிறது. இதற்காக 594 தள்ளுவண்டிகள் ,145 மின்கல வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஈரக்கழிவுகள் ,உலர் கழிவுகள் என பிரித்து சேரிகரிக்கப்படுகிறது.சேகரித்த திடக்கழிவுகள் 22 டிராக்டர், 8 டிப்பர் லாரிகள், 20 மினி ஆட்டோக்கள் மூலம் சம்மந்தபட்ட பேரூராட்சி வளமீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 840 கிலோ இயற்கை உரம் 70 கிலோ மண் புழு உரம் தயார் செய்யப்படுகிறது. இந்த உரங்கள் பொது மக்கள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.உலர் கழிவுகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் பிரிக்கப்பட்டு மறுசுழற்ச்சி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பபடுகிறது. அதோடு மாவட்ட பேரூராட்சிகளில் 234 சமுதாய கழிப்பறைகள் ,113 பொது கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
* நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் செயல்பாடு...
தாடிக்கொம்பு, கன்னிவாடி, கீரனுார் என 3 பேரூராட்சிகளில் பணிகள் நடக்கிறது. நாள்தோறும் 250 பயனாளிகளுக்கு வேலை வாய்ப்பு வழக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ரூ .300 வீதம் வார ஒரு முறை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுரை 13,500 நபர்கள் வேலை செய்து வருகின்றனர். குளம் ஆழப்படுத்துதல்,குளங்களில் உள்ள கரை பலப்படுத்துதல்,மழைநீர் வடிகால் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
குடிநீர் திட்டபணிகள் எந்த அளவில் நடக்கின்றன.
சித்தையன்கோட்டை நிலக்கோட்டை வத்தலகுண்டு என 3 பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ ரூ. 88 கோடி மதிப்பில் பணிகள் நடக்கிறது. சித்தையன்கோட்டை, நிலக்கோட்டை பேரூராட்சிகளில் 60 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.வத்தலகுண்டில் 30 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு தொடந்து பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
வீடு கட்டும் திட்டம் எந்த நிலையில் உள்ளது
மாவட்டத்தில் உள்ள 23 பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2016--2017 முதல் 2023--2024 வரை நடைபெற்று வருகிறது.
4,720 வீடுகளுக்கு பணிகள் தொடங்கி 3,500 வீடுகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஒரு வீட்டிற்கு ரூ 2.10 லட்சம் வழங்கப்படுகிறது, இதில் மத்திய அரசின் மான்ய தொகையாக ரூ.1.50 லட்சம் , மாநில அரசின் தொகையாக ரூ.60 ஆயிரம் பயனாளிகள் வங்கி கணக்கில் வைக்கப்பட்டு வருகிறது.
* என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பகிறது.
நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் வாயிலாக ரோடுகள், எரிவாயு தகன மேடை, பஸ் ஸ்டாண்ட், வார , தினசரி சந்தை, குளங்கள் மேம்பாட்டு பணிகள், பூங்கா மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் 20 பேரூராட்சிகளில் ரூ.5.96 கோடியில் அனைத்து தெருவிளக்குகளை எல்.இ.டி., தெருவிளக்காக மாற்றும் பணிகளும், 15வது நிதி குழு மான்ய திட்டம், நபார்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், திடகழிவு மேலாண்டை திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது
பொது மக்கள் தினசரி திடக்கழிவுகளை ஈரக்கழிவுகள் , உலர் கழிவுகள் என பிரித்து பணியாளரிடம் வழங்க வேண்டும். திடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டவோ, எரிக்கவோ கூடாது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து இயற்கைக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
வடிகால்களில் திடக்கழிவுகளை கொட்டாமல் பணியாளரிடம் மட்டுமே வழங்க வேண்டும்.குடிநீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி கொண்டு வீணாகாமல் குடிநீர் குழாயினை அடைக்க வேண்டும். குடிநீர் பெறுவதுற்கு மின் மோட்டார் பயன்படுத்த கூடாது.உள்ளாட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணங்களை உரியகாலத்தில் செலுத்த வேண்டும்.
அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றார்.