/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் கோயில் கடைகளை அகற்ற எதிர்ப்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
/
பழநியில் கோயில் கடைகளை அகற்ற எதிர்ப்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
பழநியில் கோயில் கடைகளை அகற்ற எதிர்ப்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
பழநியில் கோயில் கடைகளை அகற்ற எதிர்ப்பு வியாபாரி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஆக 02, 2024 12:28 AM

பழநி:பழநி முருகன் கோயில் படிப்பாதையில் கடைகளை கோயில் நிர்வாகம் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி தீக்குளிக்க முயற்சித்தார். எதிர்ப்பை மீறி கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் பழநி கிரிவீதியில் கோயில் நிர்வாகம், வருவாய்த்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. கிரிவீதியில் கடைகளை அகற்றவும் உத்தரவிட்டிருந்தது.
கடையில் வாடகைக்கு இருந்தவர்கள் மேல் முறையீடு செய்ய கடைகளை அகற்றும் உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் ஜூலை 31 வரை காலக்கெடு விதித்திருந்தது. இதை தொடர்ந்து ஜூலை 31 ல் கிரி விதி, சன்னதி வீதி, ஆர்.எப்.ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் 74 கடை வியாபாரிகள் தாங்களாகவே பொருட்களை அகற்றிக்கொண்டனர்.
நேற்று டி.எஸ்.பி., தனஞ்செயன் தலைமையிலான போலீசார் முன்னிலையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் படிப்பாதை மங்கம்மாள் மண்டபம் ஒட்டிய மயில் வளாகத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டன. பால்காவடி மண்டபத்தின் முன்பு செயல்பட்ட நான்கு கடையில் உள்ள பொருட்களை அகற்ற கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்களுக்கு சொந்தமான இடம், கடைகளை அகற்ற அவகாசம் தேவை என கோரினர். கோயில் நிர்வாகம் அனுமதிக்க முடியாது என கூற வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் பால் காவடி மண்டப கடைக்காரர் வசந்த் 23,கோயில் மண்டபத்தின் மீது ஏறி மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் .போலீசார் அவரை தடுத்தனர். இதை தொடர்ந்து தாசில்தார் சக்திவேலன் தலைமையில் அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைத்தனர்.