/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
/
போதை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
போதை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
போதை மாணவர்களுக்கு மனநல ஆலோசனை கலெக்டர் பூங்கொடி அறிவுறுத்தல்
ADDED : செப் 05, 2024 04:23 AM
திண்டுக்கல் போதை பழக்கத்தில் சிக்கிய மாணவர்களை கண்டறிந்து மன நல ஆலோசனை வழங்க வேண்டுமென கலெக்டர் பூங்கொடி கூறினார்.
மாணவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இதற்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். எஸ்.பி., பிரதீப், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோடி கலந்துகொண்டனர். கலெக்டர் பூங்கொடி பேசியதாவது : பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பதோடு போதை பழக்கத்தில் சிக்கிய மாணவர்களை கண்டறிந்து முறையான ஆலோசனைகளை மன நல ஆலோசகர்கள் மூலமாக வழங்க வேண்டும்.
புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுப்பதோடு புகார் அளிக்கும் நபர்கள் குறித்த விவரங்களை ரகசியமாக பாதுகாக்க வேண்டும். புகார்களை 94984 10581 வாட்ஸ் ஆப், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 வாயிலாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் என்றார்.