/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் கடை மாற்றம் பொதுமக்கள் அவதி
/
ரேஷன் கடை மாற்றம் பொதுமக்கள் அவதி
ADDED : மார் 06, 2025 03:49 AM
வத்தலக்குண்டு: கோம்பைப்பட்டி ஊராட்சி ரெட்டியபட்டி, கீழகோயில்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை கிராமங்களுக்கு அந்தந்த ஊர்களில் ரேஷன் கடை உள்ளன.
இரு மாதங்களுக்கு முன்பு அந்தந்த ஊரிலேயே அனைவரும் ரேஷன் பொருட்கள் வாங்கினர். 2 மாதங்களாக கீழ கோவில்பட்டி, ரெட்டியபட்டி கிராமங்களில் உள்ள சில ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெவ்வேறு ஊர்களுக்கு கடை மாறியதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக வாங்கிக் கொண்டு உள்ளோம். எப்படி திடீரென கடை மாறியது என விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். மாறிய கடைகள் 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.
முதியோர், மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
நிலக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது: ரேஷன் கடைகளுக்கு தனித்தனி சேல்ஸ்மேன்கள் நியமிக்கப்பட்டு கார்டு பதிவேற்ற மிஷின்கள் வழங்கப்பட்டது. அதில் குளறுபடி ஏற்பட்டு உள்ளது. வருவாய் ஆய்வாளரை கிராமங்களுக்கு அனுப்பி விரைவில் சரி செய்யப்படும் என்றார்.