ADDED : மே 21, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே வாடிப்பட்டியில் சித்திரை கழுவு கடைசி நாளான நேற்று ரேக்ளா ரேஸ் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. பழநி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேக்ளா வண்டிகள் நுாற்றுக்கு மேல் வந்தன. அதன்படி பழநி- உடுமலை சாலையில் ரேக்ளா ரேஸ் நடந்தது.
இதனால் சாலையில் வந்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அங்கு வந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் முருகன், தாசில்தார் சக்திவேலன் ரேக்ளா ரேஸ் அனுமதியின்றி நடத்தக்கூடாது என எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

