ADDED : ஏப் 29, 2024 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ரயில் உபயோகிப்போர் சங்க கூட்டம் உறுப்பினர் ராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் பழநி புது தாராபுரம் ரோடு ரயில்வே மேம்பாலம் விரைவில் அமைக்கவேண்டும். ரோடு விரிவாக்க பணிகளின் போது மரங்களை வெட்ட முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வையாபுரி குளம் துாய்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பாலாஜி பங்கேற்றனர்.

