தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வடமதுரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி

வடமதுரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி

வடமதுரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணி


UPDATED : ஜூலை 25, 2026 09:28 PM

ADDED : ஜூலை 25, 2026 09:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2026 09:28 PM ADDED : ஜூலை 25, 2026 09:21 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரையில் ரயில் பாதையை பலமாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட 60 கே.ஜி., தண்டவாளத்திற்குரிய ரயில் பாதை பிரிய உதவும் 'பாய்ண்ட்' கட்டமைப்பு பொருத்தப்பட்டது.

விழுப்புரம் திண்டுக்கல் இருவழி ரயில் பாதை பணி 2012ல் துவங்கி பகுதி, பகுதியாக முடிக்கப்பட்டு 2018ல் முழுமையானது. இருவழிப்பாதை பணியில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில் தண்டவாளங்கள், பாதையை பிரிக்க உதவும் 'பாய்ண்ட்' கட்டமைப்புகள் 60 கே.ஜி., தண்டவாளங்களாக பயன்படுத்தப்பட்டன.

இந்நிலையில் பாதுகாப்பில் மேம்பட்டதாக சில நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட 60 கே.ஜி.,க்குரிய 'பாய்ண்ட்' அமைப்புகளாக மாற்றும் பணி வடமதுரையில் நடந்தது. ரயில் பாதையிலும், தரையிலும் செல்லக்கூடிய 2 கிரேன்கள், மண் அள்ளும் இயந்திரம் பயன்படுத்தி புதிய 'பாய்ண்ட்' கட்டமைப்பை பொருத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us