ADDED : ஆக 13, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் வரதமாநதி, பாலாறு- பொருந்தலாறு, குதிரையாறு அணைகள் உள்ளன. இங்கு சில நாட்களாக பெய்த மழையினால் நீர் வரத்து ஏற்பட நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி பாலாறு பொருந்தலாறு அணையில் 34.51 அடி (65 அடி) நீர் இருப்பு உள்ளது. வரதமாநதி அணை நிறைந்தது (66.47 அடி). இங்கு 110 கன அடி நீர்வரத்தும் வெளியேற்றமும் உள்ளது.
குதிரையாறு அணையில் 61.37 அடி (80 அடி) உள்ளது.இங்கு 22 கன அடி நீர் நீர் வரத்தும்,வெளியேற்றமும் உள்ளது.