ADDED : ஆக 20, 2024 12:59 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம்,கோட்டை ரோட்டரி சங்கம்,குயின் சிட்டி ரோட்டரி சங்கம், குஜராத் சமாஜ்,பிரம்ம குமாரிகள் இயக்கம் இணைந்து ரக் ஷா பந்தன் நிகழ்ச்சி நடத்தியது.
கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் தீபிஷ் பட்டேல், பிரம்ம குமாரி ஆஷா, பிரம்மகுமாரி ராணி பேசினர்.
குயின் சிட்டி சங்க உறுப்பினர்கள் சகோதரத்துவத்தை போற்றும் வகையில் அனைவருக்கும் ராக்கி அணிவித்து இனிப்பு கொடுத்து மகிழ்ந்தனர். ரோட்டரி மாவட்டத்தின் பெண்கள் ஆளுமை திறன் திட்டத்தின் மாவட்ட செயலர் அல்லிராணி, திண்டுக்கல் மாவட்டத்தின் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் பவன்ஜி பட்டேல், ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர்கள் செல்வகனி, சித்ரா ரமேஷ், குஜராத் சமாஜ் சங்க தலைவர் ரவீந்திரன் பட்டேல் பங்கேற்றனர். மேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார். குயின் சிட்டி சங்கத் தலைவர் கவிதா செந்தில் குமார் நன்றி கூறினார். குயின் சிட்டி சங்க செயலர் பார்கவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
*ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் ரக் ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.
மழலையர் நடனம், சிறுநாடகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராக்கி கட்டுதல் நடந்தது. இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தோர் என்ற உறுதிமொழிக்கேற்ப மாணவர்கள் தன்னுடன் பயிலும் மாணவர்களுக்கு கையில் ராக்கி கயிற்றை கட்டி சகோதர உறவை மேம்படுத்தினர்
*பழநி அக் ஷயா பள்ளியில் மாணவர்கள் ராக்கி கட்டினர். இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்க்கரசி கலந்து கொண்டனர்.
*பழநி அ.கலையம்புத்துார் கலயம் சிறப்பு பள்ளியில் ராக்கி கட்டி ரக் ஷா பந்தன் கொண்டாடினர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பள்ளி நிறுவனர் சதீஷ் , ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

