/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ரம்ஜான் கொண்டாட்டம்
/
திண்டுக்கல்லில் ரம்ஜான் கொண்டாட்டம்
ADDED : ஏப் 12, 2024 04:50 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்கள், முக்கிய மைதானம், திடல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
முஸ்லிம்கள் ரம்ஜான் காலங்களில் ஒரு மாதம் நோன்பு கடைபிடித்து வந்தனர். இதையொட்டி நேற்று (ஏப்.11) ரம்ஜான் பண்டிகை கொண்டாட பட்டது.
மதுரை ரோட்டிலுள்ள பெரிய பள்ளிவாசல், சந்துக்கடை, முகமதியாபுரம், நாகல்நகர், வேடபட்டி, மாசிலாமணிபுரம், ரவுண்ட் ரோடு என அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். எளியவர்களுக்கு உணவு வழங்கினர். அந்தந்த பள்ளிவாசலை சேர்ந்த வசதி படைத்த ஜமாத்காரர்கள் ஏழைகளுக்கு புத்தாடைகள் பரிசளித்து மகிழ்ந்தனர்.
சித்தையன்கோட்டை : ஆத்துார், சித்தையன்கோட்டை பகுதிகளில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. சித்தையன்கோட்டை ஈதுகா மைதானத்தில் நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஆத்துார், சின்னாளபட்டி பள்ளிவாசல்களில் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பலர் சிறப்பு தொழுகை நடத்தினர்.
நத்தம்: நத்தம், அசோக் நகர், அண்ணா நகர், முஸ்லிம் மேற்கு தெரு ,கிழக்கு தெரு, தெற்கு தெரு உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத்தார்கள் ஊர்வலமாக கோவில்பட்டி கோரிமேடு ஈத்கா மைதானம் சென்றனர். அங்கு ஒன்றிணைந்து உலக நன்மை வேண்டி தக்பீர் ஓதி தொழுகை நடத்தினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
வேம்பார்பட்டி, கணவாய்பட்டி ஜமாத் இஸ்லாமியர்கள் கணவாய்ப்பட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை செய்தனர்.
பாறைப்பட்டி, மருநுாத்து, நத்தம் கோசிகுறிச்சி, பெரியூர்பட்டி, பரளி, மணக்காட்டூர், சாணார்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ரம்ஜான் சிறப்பு தொழுகைகள் நடந்தது.
பழநி : பெரிய பள்ளிவாசல் ,சண்முக நதிக்கரை அருகே சிறப்பு தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்தபின் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். பாலசமுத்திரம், ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, கீரனுார் பகுதியிலும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.
ஒட்டன்சத்திரம் : மதினா பள்ளிவாசல், வடக்கு பள்ளிவாசல், பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத்தார்கள் நகர் பகுதியில் ஊர்வலமாக சென்று செக்போஸ்ட் பகுதி திடலில் தொழுகை நடத்தினர். தர்கா பள்ளி வாசல், டவுன் பள்ளிவாசல், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி, விருப்பாச்சி சாலைப்புதுார் பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்து பரிமாறிக் கொண்டனர்.
கொடைக்கானல் : கொடைக்கானல் ஈத்ஹா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது.இதில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் கலந்து கொண்ட னர். மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். பள்ளிவாசல் தலைவர் காஜா நன்றி கூறினார்.

