/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சகோதரிகளை பலாத்காரம் செய்ததைவீடியோ எடுத்து மிரட்டியது அம்பலம் l கைதான மூவர் விசாரணையில் தகவல் l தலைமறைவானவரை பிடிக்க 3 தனிப்படை

ADDED : ஏப் 07, 2024 01:24 AM

சாணார்பட்டி:திண்டுக்கல் அருகே காதலர்களை கட்டிப்போட்டு அவர்கள் முன் 19, 17 வயது சகோதரிகளை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து கைதான மூவர், பலாத்காரம் செய்ததை அலைபேசியில் வீடியோ எடுத்து மிரட்டியது தெரிந்தது. தலைமறைவான ரவுடியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 17, 19, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர்.
இவர்களுக்கு தாய் இல்லாத சூழலில் தந்தை மற்றும் தாத்தா பராமரிப்பில் வளர்ந்து வந்தனர். 19, 17 வயது சகோதரிகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலர்களுடன் அருகிலுள்ள கிராமத்து கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பினர்.
அப்போது சரண்குமார் 21, வினோத் குமார் 26, சூரிய பிரகாஷ் 22, ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி சகோதரிகள், காதலர்களை தாமரைக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவர்களது நண்பரான பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரசன்ன குமாருடன் 25, சேர்ந்து காதலர்களை கயிற்றால் கட்டி போட்டு அவர்கள் முன்னே இரவு முழுவதும் 17, 19 வயது சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்தனர்.
சாணார்பட்டி மகளிர் போலீசார் விசாரித்து சரண்குமார், வினோத் குமார், சூர்யா பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பிரசன்னகுமாரை தேடி வருகின்றனர்.
கைதான மூவரின் அலைபேசியில் பலாத்காரம் செய்த வீடியோ பதிவாகியுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வீடியோவை பரப்பி விடுவோம் என சகோதரிகளை அவர்கள் மிரட்டியதும் தெரிய வந்தது.
மது, கஞ்சா போதையில் நான்கு பேரும் இதுபோன்று பல்வேறு குற்றச்சம்பங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.
தலைமறைவான பிரசன்னாகுமாரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.