/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
/
16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்
ADDED : செப் 04, 2024 06:56 AM

திண்டுக்கல் : ''3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக,'' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
திண்டுக்கல்லில் தி.மு.க., கிழக்கு,மேற்கு மாவட்டம்,நத்தம் சட்டசபை தொகுதி,திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் சார்பில் நடந்த பொது குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 2024 தேர்தலில் இண்டி கூட்டணிக்கு தமிழக மக்கள் வெற்றியை வழங்கினர். 2026 சட்டசபை தேர்தலில் 200க்கு மேலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து விரைவில் கொடுப்போம் என முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி கூறி உள்ளனர். 3 ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் கட்டமாக 1 லட்சம் பேருக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பெண்களின் கல்வி வளர்ச்சி 34 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
திண்டுக்கல் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம்,மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன்,ஒன்றிய தலைவர் ராஜா, நத்தம் பேரூராட்சி தலைவர் ஷேக் சிக்கந்தர் பாட்சா, மாவட்ட மீனவர் அணி கணேசன், கவியரசன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் தேவி இளங்கோ, பங்கேற்றனர். மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி நன்றி கூறினார்.
தி.மு.க.,வினருக்கு 'அலர்ட்'
வடமதுரை: -வடமதுரையில் நடந்த கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள், வடமதுரை, அய்யலுார் பேரூராட்சி தி.மு.க., பொது உறுப்பினர் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும் இங்கே என்ன நடக்கிறது என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறார். 2026 தேர்தலுக்கு தற்போதே திண்ணை பிரசாரம் உள்ளிட்ட பல வழிகளிலும் மக்களிடம் அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அதிகாரிகளை அழைத்து பேசி தீர்வு காணப்படும் என்றார்.
ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், மாணவரணி அமைப்பாளர் தினேஷ், ஒன்றிய அவைத் தலைவர் முனியப்பன், துணை செயலாளர் சுப்பையா, இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன் பங்கேற்றனர்.