/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
/
ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
ADDED : மார் 05, 2025 06:29 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 3 டன் ரேஷன் அரிசியை ரைஸ் மில்லில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
குடிமை பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில் திண்டுக்கல் பள்ளிப்பட்டி பகுதி தனியார் ரைஸ் மில்லில் சோதனை நடத்தினர். 3 டன் ரேஷன் அரிசி மூடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. விசாரணையில் திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன்29, பேகம்பூர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹபிப் ரஹ்மான் 49, என்பவரிடம் கொடுத்து அவர் மூலமாக பள்ளிப்பட்டி தனியார் ரைஸ் மில்லில் அரைத்து கோழி , மாடுகளுக்கு தீவனமாக விற்பனை செய்தது தெரிந்தது. இதில் மேலும் சிலர் தொடர்புடையதும் தெரிந்தது. மணிகண்டன், ஹபீப் ரகுமானை போலீசார் கைது செய்து 3 டன் ரேஷன் அரிசி, ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர்.