ADDED : ஏப் 07, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : செம்பட்டி நிலக்கோட்டை ரோட்டில் மைக்கேல் பாளையம் அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியில் வந்த வேன் ஒன்று போலீசாரை கண்டதும் வேகமாக வந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் சோதனை செய்ததில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. நிலக்கோட்டை பாலம் பட்டியைச் சேர்ந்த தேவேந்திரனை போலீசார் அவரை கைது செய்தனர்.

